'தலைவி' படத்திற்காக மீண்டும் களமிறங்கிய கங்கனா ரனாவத்!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை விஜய் இயக்கி வருகிறார்.
’தலைவி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருவதாக கங்கனா ரனாவத் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து மீண்டும் ’தலைவி’ படத்திற்காக கங்கனா களம் இறங்கி உள்ளார் என்பது இதிலிருந்து தெரிய வந்துள்ளது.
’தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதற்காக கடைசி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை பட குழுவினர் இரவு பகலாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே.
Dubbing for #Thalaivi
— Kangana Ranaut (@KanganaTeam) March 6, 2021
I haven’t had a single day’s break not even through my periods not a single day off since 2021 started ...
Not complaining #justsaying https://t.co/ZXkZ4pl7zO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments