போதையில் இருந்து மீண்டது எப்படி? 'தலைவி' பட நாயகி பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கங்கனா ரணாவத், தான் சிறுவயதில் போதைக்கு அடிமையாக இருந்ததாகவும் அதன்பின்னர் போதையிலிருந்து மீண்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நான் டீன் ஏஜ் வயதில் இருக்கும்போது வீட்டைவிட்டு ஓடிவந்து அதன்பின் சினிமாவில் நடித்தேன். அப்போது எனக்கு போதை பழக்கம் ஏற்பட்டது. ஒன்றரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை போதைக்கு அடிமையாக நான் இருந்தது தான் சோதனையான கட்டம்
அப்போது என்னை போதை பழக்கத்தில் இருந்து காப்பாற்ற சிலர் முயற்சித்தனர். கடைசியில் ஒரு நல்ல நண்பர் எனக்கு யோகாவை கற்று கொடுத்தார். ராஜயோகா புத்தகம் ஒன்றையும் வழங்கினார். சுவாமி விவேகானந்தரை குருவாக ஏற்று என்னை வளர்த்துக்கொண்டேன்.
எனது வாழ்க்கையில் அந்த சவாலான நேரங்கள் வராமல் இருந்திருந்தால் கூட்டத்தோடு காணாமல் போய் இருப்பேன். எனக்கு மன உறுதியும், திறமையும் உருவாக ஆன்மிகம் வழிகாட்டியது. மோசமான நேரங்கள்தான் உண்மையில் நல்ல நேரங்கள்”. இவ்வாறு வீடியோ ஒன்றில் கங்கனா ரானாவத் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout