அரசுக்கு உளவு பார்க்க உரிமை உள்ளது: பிரபல நடிகையின் கருத்தால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Tuesday,July 20 2021]

கடந்த இரண்டு நாட்களாக பெகாசஸ் என்ற செயலி மூலம் முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்றும் இன்றும் நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சனையை எழுந்ததால் நாடாளுமன்றமே ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடதக்கது

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்பட பலரது செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த புகாருக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பெகாசஸ் என்ற செயலி மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து நடிகர் சித்தார்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை கூறி வரும் நடிகை கங்கனா ரணாவத் ’அரசுக்கு உளவு பார்க்க உரிமை உள்ளது என்பது போல் ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார்

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது ’அந்த காலங்களில் அரசு நிர்வாகத்தை பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள மன்னர் ரகசியமாக ஊருக்குள் சென்று வருவார்கள். மன்னர்களுக்கு அதற்கான உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் நான் பெகாசஸ் பற்றி பேசவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.