அந்த படம் ஒரு குப்பைப்படம்: கங்கனா ரனாவத்தின் சர்ச்சை பதிவு!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வெளியான பிரபல நடிகை ஒருவரின் படத்தை குப்பை படம் என நடிகை கங்கனா ரனாவத் விமர்சனம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ’தலைவி’ என்ற திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேரக்டரில் நடித்தருமான நடிகை கங்கனா ரணவத் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி தீபிகா படுகோனே நடித்த ‘கெஹ்ரையான்‘ என்ற திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தை விமர்சகர்களும் ஊடகங்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர் என்பதும் ஒரு முக்கோண காதல் கதையான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் குறித்து தனது கருத்தை தெரிவித்த நடிகை கங்கனா ரணாவத், ‘ புதிய நாகரீகம் என்ற பெயரில் குப்பை திரைப்படங்களை விற்காதீர்கள் என்றும், மோசமான திரைப்படங்களை மோசமான திரைப்படங்களாக காட்டுகள் என்றும் இது ஒரு அடிப்படை உண்மையை என்றும் பதிவு செய்துள்ளார். கங்கனாவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments