லைகாவின் அடுத்த படத்தில் கங்கனா ரனாவத்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
லைகா நிறுவனத்தின் அடுத்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஏ.எல் விஜய் இயக்கிய ’தலைவி’ என்ற படத்தில் நடித்தார் என்பதும், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சந்திரமுகி 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய பி வாசு இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் கேரக்டரான சந்திரமுகி கேரக்டரில் நடிப்பது யார் என்ற கேள்வி எழுந்தது. முதல் பாகத்தில் சந்திரமுகி கேரக்டரில் நடித்த ஜோதிகா நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் இந்த கேரக்டரில் கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புதிய போஸ்டரையும் லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்த படத்தில் இணைந்து உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
We are elated ??✨ to welcome #KanganaRanaut into the world of #Chandramukhi2 ??️@offl_Lawrence ?? #PVasu ?? Vaigaipuyal #Vadivelu @realradikaa ✨ @mmkeeravaani ?? @RDRajasekar ?? #ThottaTharani ?? @proyuvraaj ??️ @gkmtamilkumaran ????????@LycaProductions #Subaskaran ?? pic.twitter.com/cmLp5ehJ7o
— Lyca Productions (@LycaProductions) December 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments