திருமணமான அவருடன் டேட்டிங் இல்லை: வேறொருவரை காதலிக்கிறேன்: கங்கனா ரனாவத்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கங்கனா ரனாவத் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் ’அவருக்கு திருமணம் ஆகிவிட்டது எனவே அவருடன் டேட்டிங்கில் நான் இல்லை, நான் வேறு ஒருவருடன் டேட்டிங்கில் இருக்கிறேன்’ என்று கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
பிரபல தொழிலதிபர் மற்றும் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நிஷாத் பிட்டி என்பவரை நடிகை கங்கனா ரனாவத் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் வைரலானது. சமீபத்தில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு கூட கங்கனா ரனாவத், நிஷாத் பிட்டியுடன் தான் சென்று இருந்தார் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் காதலிப்பதாகவும் டேட்டிங்கில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களிலும், வட இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் இது குறித்து கங்கனா ரனாவத் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், ‘நிஷாத் பிட்டியுடன் நான் டேட்டிங்கில் இல்லை, வேறு ஒருவரை தான் டேட்டிங் செய்கிறேன், நிஷாந்த் பிட்டிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது, எனவே தேவையில்லாத வதந்தியை பரப்ப வேண்டாம்.
எனது காதலர் யார் என்பதை சொல்வதற்கு சரியான நேரம் வரும், அதுவரை காத்திருங்கள், அதற்கு முன் தயவு செய்து என்னை வேறொரு ஆணுடன் இணைத்து தவறாக பேச வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். கங்கனா ரனாவத்தின் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments