மீண்டும் இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத்? ஹீரோ யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் விஜய் இயக்கத்தில், ஏற்கனவே "தலைவி" என்ற திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் அவரின் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட "தலைவி" திரைப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்தார் என்பதும், இந்த படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்தது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், இயக்குனர் விஜய்யின் அடுத்த திரைப்படத்திலும் கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு "லைட்" என டைட்டில் வைத்துள்ளதாகவும், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, மாதவன் மற்றும் கங்கனா "தனு வெட்ஸ் மனு" என்ற பாலிவுட் படத்தில் நடித்த நிலையில், தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதால், இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments