மீண்டும் இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத்? ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,September 27 2024]

இயக்குனர் விஜய் இயக்கத்தில், ஏற்கனவே தலைவி என்ற திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் அவரின் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட தலைவி திரைப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்தார் என்பதும், இந்த படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், இயக்குனர் விஜய்யின் அடுத்த திரைப்படத்திலும் கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு லைட் என டைட்டில் வைத்துள்ளதாகவும், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, மாதவன் மற்றும் கங்கனா தனு வெட்ஸ் மனு என்ற பாலிவுட் படத்தில் நடித்த நிலையில், தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதால், இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

கார் ரேஸ்-க்கு தயாராகும் அஜித்.. சூப்பர் வீடியோ வைரல்..!

நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

பிரபல நடிகரின் படத்தில் வில்லன்களாக நடிக்கும்  நட்சத்திர ஜோடி.. யார் அவர்கள்?

பிரபல நடிகரின் படத்தில் பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி வில்லன்களாக நடிக்க இருப்பதாக கூறப்படும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகள்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நடிகை பூஜா குமார் க்யூட் பதிவு..!

நடிகை பூஜா குமார் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "மகள்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்

எங்கள் மொத்த குடும்பமும் இதுவரை இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை: விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எங்கள் மொத்த குடும்பமும் இதுவரை இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததே இல்லை" என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பதிவு தற்போது

கேமிராமேனை பாராட்டியே ஆக வேண்டும்: சாயிஷா நடன வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை சாயிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்மையாக நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு கேமராமேன் பாராட்டப்பட வேண்டும் என்பது