'நான் பிரதமர் வேட்பாளரா? 'சந்திரமுகி 2' நடிகையின் கிண்டல் பதில்..!

  • IndiaGlitz, [Monday,February 12 2024]

பி வாசு இயக்கத்தில் உருவான ’சந்திரமுகி 2’ திரைப்படத்தில் நடித்த நடிகை கங்கனா ரனாவத் அவர்களிடம் பிரதமர் பதவி மீது ஆசை இருக்கிறதா என்று கேட்ட கேள்விக்கு ’நான் எமர்ஜென்சி என்ற படத்தை நடித்து இயக்கி இருக்கிறேன், அந்த படத்தை யாராவது பார்த்தால் என்னை பிரதமராக பார்க்க மக்கள் விரும்ப மாட்டார்கள்’ என்று கிண்டலாக கூறியுள்ளார்.

சமீபத்தில் ‘ரசாகர்: சைலண்ட் ஜெனோசைட் ஆஃப் ஹைதராபாத்’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விழா மும்பையில் நடந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கங்கனா ரனாவத் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார். அப்போது அவரிடம் ’இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே ’நான் எமர்ஜென்சி என்ற படத்தை நடித்து இயக்கி இருக்கிறேன். இந்த படத்தை பார்த்த பிறகு யாரும் என்னை பிரதமராக பார்க்க விரும்ப மாட்டார்கள்’ என்று கிண்டலாக கங்கனா ரனாவத் கூறினார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சியை நாடு முழுவதும் அமல்படுத்தினார் என்பதும் அப்போது அவர் மீது மக்கள் கடும் வெறுப்பில் இருந்தார்கள் என்பதும் அந்த சம்பவங்களை வைத்து தான் ’எமர்ஜென்சி’ படத்தை கங்கனா ரனாவத் உருவாக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் வரும் ஜூன் 14ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.