பிரபல இந்தி, தமிழ் நடிகையின் டிவிட்டர் பக்கம் முடக்கம்… காரணம் இதுதான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத்தின் கருத்துகள் பொது வெளியில் பலரது கவனத்தைப் பெற்றது. ஆனால் இவர் தொடர்ந்து முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் பொதுவெளியில் சர்ச்சையை ஏற்படுத்துவதாகச் சிலர் கருத்து கூறிவந்தனர். மேலும் இவர் முன்வைக்கும் அரசியல் கருத்துகள் பெரும்பாலானவர்களுக்கு எரிச்சலை ஊட்டும் ரகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் விவசாயிகள் போரட்டத்தைக் குறித்து தெரிவித்து இருந்த கருத்துகள் பலரது கண்டனத்தை பெற்றது.
அந்த வகையில் தற்போது இவர் “தாண்டவ்” வெப் சீரியலை குறித்து வெளியிட்ட கருத்துகள் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்து இருக்கிறது எனக் கூறி கங்கனாவின் டிவிட்டர் பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இவரது கருத்துக்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து கங்கனா தனது பதிவை டிவிட்டரில் இருந்து நீக்கினார். ஆனால் அவர் வெளியிட்ட பதிவின் ஸ்கீர்ஷாட் நேற்று முழுவதும் டிவிட்டர் பக்கத்தில் வைரலாகி இந்திய அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நெட்டிசன்கள், நடிகை கங்கனாவின் கருத்து வன்முறையைத் தூண்டும் விதமாக அமைந்து இருக்கிறது என்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் பக்கம் முடக்கப் பட்டதைப்போல இவரது டிவிட்டர் பக்கமும் முடக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்து வந்தனர். அதையடுத்து நேற்று டிவிட்டர் நிர்வாகம் கங்கனாவின் டிவிட்டர் பக்கத்தை தற்காலிகமாக முடக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதனால் கங்கனா எந்தவொரு பதிவை பதிவிடவோ அல்லது கருத்துத் தெரிவிக்கவோ முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கங்கனாவைத் தவிர “தாண்டவ்” வெப் சீரியலின் கதை, இந்துக் கடவுள்களை பரிகாசம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது என்று எம்.பி.மனோஜ் கோடக் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதமும் எழுதி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கும் “தாண்டவ்“ வெப் சீரியல் கடந்த வெள்ளிக் கிழமை அன்று அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியானது. இந்த வெப் சீரியஸை அலி அப்பாஸ் இயக்கி, தயாரித்து இருக்கிறார். இதன் கதையை “ஆர்டிகள் 15” திரைப்படத்தின் கதாசிரியர் கௌரவ் சொலாங்கி எழுதியுள்ளார்.
இந்நிலையில் நடிகை கங்கனாவின் டிவிட்டர் பக்கத்தை முடக்கியுள்ள டிவிட்டர் நிர்வாகம், “டிவிட்டர் விதிமுறைகளை மீறும் எந்த ஒரு கணக்கின் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எங்கள் சேவையில் மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக முன்வைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். எனினும் எங்களுடைய கொள்கையின்படி எந்தவொரு தனிநபரையோ அல்லது பிற மக்களையோ குறி வைத்து தாக்குதலில் யாரும் ஈடுபடக்கூடாது” எனக் கூறி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com