விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த ரிஹானவை 'முட்டாள்' என கூறிய இந்திய நடிகை

  • IndiaGlitz, [Wednesday,February 03 2021]

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹாலிவுட் நடிகை ரிஹானாவை ’முட்டாள்’ என இந்திய நடிகை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து ஏன் நாம் பேசவில்லை? என ஹாலிவுட் நடிகையும் பாப் பாடகியுமான ரிஹானா தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்

இந்த டுவிட் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த ட்விட்டிற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: விவசாயிகள் போராட்டம் குறித்து யாரும் பேசவில்லை, ஏனென்றால் அவர்கள் விவசாயிகளே அல்ல, அவர்கள் இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். இதுகுறித்து நீங்கள் பேச வேண்டாம் முட்டாளே. நாங்கள் உங்களை போல் எங்கள் தேசத்தை விற்பனை செய்வதில்லை’ என்று கூறியுள்ளார். கங்கனாவின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது