மூன்றாவது குழந்தை பெற்றால் சிறை? மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் பிரபல பாலிவுட் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தற்போது பீதியை கிளப்பி வருகிறது. அதிலும் பல வட மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு கூட மருத்துவனைகளில் படுக்கை வசதி இல்லாமல் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறையால் பல நெருக்கடி நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது ஏற்படும் அதிக இறப்புகளுக்கு இங்கு இருக்கும் அதிகமான மக்கள் தொகையே காரணம் எனும் சர்ச்சை கருத்தை வெளியிட்டு இருக்கிறார் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
பாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை கங்கனா ரனாவத், தான் சார்ந்து இருக்கும் கருத்து நிலையில் அவ்வபோது சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். சமீபத்தில் விவசாயப் போராட்டத்திலும் இவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டார் என்று அவர்மீது பலரும் விமர்சனம் வைத்தனர். அவர் தற்போது தனது டிவிட்டரில் “மக்கள் தொகை கட்டுப்பாடுகளுக்கு கடுமையான சட்டங்கள் தேவை. குறைந்தப் பட்சம் மூன்றாவது குழந்தைக்கு அபராதம் அல்லது சிறைவாசம் இருக்க கொடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டு உள்ளார்.
இதுகுறித்த கடுமையான விவாதம் தற்போது சமூக வலைத்தளங்களில் எழுந்து உள்ளது. இதையடுத்து பேசிய நடிகை கங்கனா, “இந்தியாவை விட 3 மடங்கு நிலம் மற்றும் வளங்களைக் கொண்டுள்ள அமெரிக்காவில் வெறும் 32 கோடி மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். 130 கோடி இந்தியர்கள் இந்தியாவில் உள்ளனர். அதனால்தான் தற்போது இந்தியாவில் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. அதிலும் 25 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பவர்கள். தற்போது கொரோனா நோய்த்தொற்றின்போது ஒரு சிறந்த தலைமை இங்குள்ள அனைத்து விஷயங்களையும் சரிசெய்து வருகிறார்” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவை ஒட்டி நடிகை கங்கனா ரனாவத் சொல்லும் விஷயம் ஒருவேளை சரியாகக்கூட இருக்கலாம். ஆனால் கொரோனா நோய்த்தொற்றின் போது இந்தக் கருத்தை அவர் ஏன் கூறுகிறார். ஒரு பெருந்தொற்றை எதிர்க்கொள்ள முடியாத அரசாங்கத்தை குறித்து விமர்சனம் செய்யாத அவர் மக்களின் மீது குற்றம் சாட்டி வருகிறார் எனச் சமூக வலைத்தளங்களில் நடிகை கங்கனாவின் கருத்துக்கு கடும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் சிறை அல்லது அபராதம் விதிக்கலாம் என நடிகை கங்கனா கூறிய கருத்துக்கு பதில் அளித்து பிரபல நகைச்சுவை நடிகை சலோனி கவுர் ஒரு தெறிக்கவிடும் பதிவை டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில் நடிகை கங்கனாவுடன் அவரது சகோதரி மற்றும் சகோதரர் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தங்களுக்கும் இரண்டு உடன் பிறப்புகள் இருக்கின்றனர் எனக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://t.co/zkdeWSNIP3 pic.twitter.com/LYHNj8LP1y
— Saloni Gaur (@salonayyy) April 20, 2021
People are dying because of over population 130 crore Indians on paper but add more 25crores illegal immigrants a third world country but got a great leadership which is leading the world in vaccination drive and fight against corona. But we also need to take responsibility na.
— Kangana Ranaut (@KanganaTeam) April 20, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments