close
Choose your channels

ஆக்ஷன் படத்திற்காக வேறலெவல் வொர்க் அவுட்டில் நடிகை கங்கனா ரணாவத்… வைரல் வீடியோ!

Tuesday, June 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் வொர்க் அவுட்டில் களம் இறங்கியிருக்கும் வீடியோ சமூகவலைத் தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வொர்க் அவுட், ஆக்ஷன் திரைப்படத்திற்காக என்று கூறப்படும் நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் ‘மணிக்கர்னிகா‘ திரைப்படத்தை இயக்கி நடித்த நிலையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘தலைவி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இது இந்தியா முழுக்கவே வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து எமெர்ஜென்சி திரைப்படத்தை இயக்கி வந்தார்.

மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் வரலாற்றுத் திரைப்படமான ‘எமெர்ஜென்சி‘ 1977 இல் பிறப்பிக்கப்பட்ட எமெர்ஜென்சி காலக்கட்டத்தை எடுத்துக்காட்டுவதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கதையில் இந்திரா காந்தியாக நடிகை கங்கனா நடித்துவரும் நிலையில் அவரே படத்தையும் இயக்கி இருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்காக வொர்க் அவுட் விஷயங்களை விட்டு ஒதுங்கி இருந்த அவர் தற்போது புதிய ஆக்ஷன் படத்திற்காக அதிரடி வேகத்துடன் வொர்க் அவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

நடிகை கங்கனா நடிப்பில் ‘டிக்கு வெட்ஸ்‘ திரைப்படம் வெளியாக இருக்கிறது. காதல், காமெடி கலவையான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் நிலையில் அவர் தமிழ் நடிகர் மாவதன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment