ஆக்ஷன் படத்திற்காக வேறலெவல் வொர்க் அவுட்டில் நடிகை கங்கனா ரணாவத்… வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,June 13 2023]

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் வொர்க் அவுட்டில் களம் இறங்கியிருக்கும் வீடியோ சமூகவலைத் தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வொர்க் அவுட், ஆக்ஷன் திரைப்படத்திற்காக என்று கூறப்படும் நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் ‘மணிக்கர்னிகா‘ திரைப்படத்தை இயக்கி நடித்த நிலையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘தலைவி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இது இந்தியா முழுக்கவே வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து எமெர்ஜென்சி திரைப்படத்தை இயக்கி வந்தார்.

மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் வரலாற்றுத் திரைப்படமான ‘எமெர்ஜென்சி‘ 1977 இல் பிறப்பிக்கப்பட்ட எமெர்ஜென்சி காலக்கட்டத்தை எடுத்துக்காட்டுவதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கதையில் இந்திரா காந்தியாக நடிகை கங்கனா நடித்துவரும் நிலையில் அவரே படத்தையும் இயக்கி இருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்காக வொர்க் அவுட் விஷயங்களை விட்டு ஒதுங்கி இருந்த அவர் தற்போது புதிய ஆக்ஷன் படத்திற்காக அதிரடி வேகத்துடன் வொர்க் அவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

நடிகை கங்கனா நடிப்பில் ‘டிக்கு வெட்ஸ்‘ திரைப்படம் வெளியாக இருக்கிறது. காதல், காமெடி கலவையான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் நிலையில் அவர் தமிழ் நடிகர் மாவதன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

13 வயதிலேயே பாலியல் கொடுமையை அனுபவித்தேன்… பகீர் தகவலை பகிர்ந்த பாலிவுட் நடிகை!

பாலிவுட்டில் ஸ்டார் கிட்ஸ் நடிகைகளுள் ஒருவரான சோனம் கபூர், தான் 13 வயதிலேயே பாலியல் கொடுமையை அனுபவித்ததாக பகிர்ந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

ZEE5 ஓடிடியில் விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்': தேதி அறிவிப்பு..!

இந்தியாவின் மிகப்பெரிய OTT தளம் ZEE5 தளத்தில் விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023 அன்று வெளியாகும்  என அறிவித்துள்ளது. SNS புரொடக்ஷன் நிறுவனத்தின்

கமல், விஜய் பட வில்லன் நடிகர் திடீர் மரணம்.. மாரடைப்பு என தகவல்.. ரசிகர்கள் இரங்கல்..!

கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய் உட்பட பல பிரபலங்களின் படங்களில் வில்லனாக நடித்த நடிகர் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானதை அடுத்து திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது.

தனுஷின் D50 படத்தின் கதை இதுவா? ஒரே சென்டிமெண்ட் மழையா இருக்கும்போல..!

தனுஷ் நடித்து இயக்க உள்ள 'D50' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது என்பதை பார்த்தோம். தனுஷின் 50வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை 'பா பாண்டி'

'லியோ' படத்தை உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளோம் - தயாரிப்பாளர் லலித்

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023  நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது  .