தயவுசெய்து என்னை உங்கள் படத்தில் நடிக்க கூப்பிடாதீர்கள்: கங்கனா ரனாவத் அதிர்ச்சி பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தயவுசெய்து உங்கள் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என பாலிவுட் இயக்குநர் சந்தீப் ரெட்டிக்கு நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவான ’அனிமல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்திற்கு திரையுலகினர் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர், குறிப்பாக பெண்ணியவாதிகள் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த படம் முழுக்க முழுக்க ஆணாதிக்கம் நிறைந்ததாக உள்ளது என்றும் இயக்குனர் ஆணாதிக்கத் தன்மை உடையவராக இருப்பார் என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தை நடிகை கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் அதற்கு பதிலளித்த இயக்குநர் சந்தீப் ரெட்டி, ’கங்கனா ஒரு மிகச் சிறந்த நடிகை, அவரது ’குயின்’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும், எனது படத்தில் அவருக்கான கேரக்டர் இருந்தால் கண்டிப்பாக அவரை நடிக்க அழைப்பு விடுப்பேன்’ என்று தெரிவித்தார்.
இதற்கு தனது சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்துள்ள கங்கனா, ‘தயவு செய்து என்னை உங்கள் படத்தில் நடிக்க அழைப்பு விடுக்க வேண்டாம், அவ்வாறு அழைப்பு விடுத்தால், உங்களது ஆணாதிக்க கேரக்டர்கள் என்னால் பெண்ணியவாதியாக மாறிவிடுவார்கள், நீங்கள் வெற்றிப்படங்களை கொடுத்து வருவதால் பாலிவுட்டுக்கு நீங்கள் கண்டிப்பாக தேவை, எனவே என்னை உங்கள் படத்திற்கு அழைக்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார். கங்கனாவின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
समीक्षा और निंदा एक नहीं होते, हर तरह की कला की समीक्षा और चर्चा होनी चाहिए यह एक सामान्य बात है ।
— Kangana Ranaut (@KanganaTeam) February 5, 2024
संदीप जी ने जैसे मेरी समीक्षा पे मुस्कुराते हुए मेरे प्रति आदर का भाव दिखाया, ये कहा जा सकता है की वो सिर्फ़ मर्दाना फ़िल्में ही नहीं बनाते, उनके तेवर भी मर्दाना हैं, धन्यवाद सर 🙏… https://t.co/qi2hINWYcu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments