சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இல்லையா? பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

  • IndiaGlitz, [Friday,April 05 2024]

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என சின்ன குழந்தைக்கு கூட தெரியும் நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பிரபல நடிகை ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகையும் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவருமான கங்கனா ரனாவத், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ’சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்? என்ற கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் கேலி செய்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் பிவி ஸ்ரீநிவாஸ் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ’தயவுசெய்து படித்த விவேகமானவருக்கு வாக்களியுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட வீரர் என்றாலும் அவர் சுதந்திரத்திற்கு முன்பே காலமாகிவிட்டதாக கூறப்படுவதுண்டு. அப்படி இருக்கும்போது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்று கொஞ்சம் கூட அடிப்படை அறிவு இல்லாமல் இந்த பேட்டியில் கங்கனா கூறியுள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திர பெற்ற பின்னர் ஜவஹர்லால் நேரு தான் முதல் முறையாக சுதந்திர இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றார் என்பதும் அவர் சாகும் வரை பிரதமராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.