நடிகர்களுக்கு இணையாக அதிக சம்பளம் வாங்குகிறேன்... பெருமைபட்ட 'தலைவி' பட நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அளவில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் தனது சம்பள விஷயத்தைக் குறித்து கருத்துப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஏற்கனவே சினிமா துறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் இவர் பகிர்ந்து கொண்டுள்ள கருத்து கவனம் பெற்றிருக்கிறது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் தமிழில் நடிகர் ஜெய் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். துடிப்பான இவருடைய நடிப்புக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்திருந்த இவர் ‘மணிகர்னிகா’ திரைப்படத்தை அவரே இயக்கி அவரே நடித்து வரவேற்பை பெற்ற நிலையில் இந்திய அளவில் மிகவும் பிரபலமானார்.
அதைத் தொடர்ந்து தமிழில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘தலைவி’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இப்படி முக்கிய பிரபலமாக இருந்து வரும் இவர் தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா அளித்திருந்த பழைய நேர்காணல் வீடியோ ஒன்றை பகிர்ந்துகொண்டு பாலிவுட்டில் ஆண் நடிகர்களுக்கு இணையாக நான் அதிக சம்பளம் வாங்குகிறேன் என்று பெருமையாடு கூறியிருக்கிறார்.
மேலும் ஆண் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வேண்டும் என்று முதலில் நான்தான் சண்டை போட்டேன். இதனால் நடந்த அருவருப்பான சம்பவங்கள் என்னவென்றால் நான் பேரம் பேசிய திரைப்படத்தில் சில நடிகைகள் இலவசமாக நடித்துக் கொடுத்தனர்.
பெரும்பாலான முன்னணி நடிகைகள் சில சலுகைகளுக்காக இலவசமாக நடிக்கின்றனர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இந்த வேடம் மற்றவர்களுக்குச் சென்றுவிடக்கூடாது என்ற நோக்கமே இதற்கு முக்கியக் காரணம். ஆனால் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று பின்னர் கட்டுரைகளை வெளியிடுகின்றனர். ஆனால் திரைத்துறையில் ஆண் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவது நான் மட்டும்தான் என்று அனைவருக்கும் தெரியும் என்று நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு நடிகை பிரியங்கா சோப்ரா நான் பாலிவுட்டில் 60 திரைப்படங்களில் நடித்து விட்டேன். ஆனால் ஹீரோக்களுக்கு வழங்கும் சம்பளத்தில் வெறும் 10% மட்டுமே ஹீரோயின்களுக்கு வழங்கினர். மேலும் என்னுடைய நிறத்தினால் அவமதிக்கப்பட்டேன் என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோவை குறிப்பிட்டுத்தான் தற்போது நடிகை கங்கனா பாலிவுட் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக அதிக சம்பளம் வாங்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய சிட்டாடல் வெப் சீரிஸ் குறித்துபேசிய போது முதல் முறையாக ஆண் நடிகருக்கு இணையாக சம்பளம் பெற்றுள்ளேன் என்று சுட்டிக்காட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com