விலைமாது முதல் புரட்சித்தலைவி வரை.. காங்கிரஸ் பிரமுகருக்கு பதிலடி கொடுத்த கங்கனா ரனாவத்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் பாஜக வேட்பாளராக போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவரது தேர்வு குறித்து எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம் செய்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் பிரமுகர் சுப்ரியா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் கங்கனாவின் கிளாமர் புகைப்படத்தை ஒன்றை பதிவு செய்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு நடிகை குஷ்பு உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பதிவு குறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கங்கனா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 20 ஆண்டுகளில் நான் விலைமாது முதல் புரட்சித் தலைவி கேரக்டர் வரை நடித்துள்ளேன், அனைத்து விதமான பெண்கள் கேரக்டரிலும் நான் சிறப்பாக நடித்துள்ளேன், பெண்களின் உடல் அங்கங்கள் மீதான ஈர்ப்பை கடந்து பெண்கள் எழுச்சி பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய கொள்கை. விலைமாது உட்பட ஒவ்வொரு பெண்ணும் மரியாதைக்கு உரியவர் தான் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சர்ச்சைக்குரிய பதிவு செய்த காங்கிரஸ் பிரமுகர் சுப்ரியா ’என்னுடைய சமூக வலைதளம் ஹேக் செய்யப்பட்டு விட்டது, அதனால் தான் சர்ச்சைக்குரிய பதிவுகள் என்னை மீறி பதிவாகியுள்ளது, எனினும் என்னுடைய கவனத்திற்கு அவை வந்தவுடன் அந்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு பெண் குறித்து நான் தவறாக பேச மாட்டேன் என்பது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும், என்னுடைய பெயரில் உள்ள கணக்கை யாரோ பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது, இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Absolutely appalling and disgusting post by @INCIndia spokesperson @SupriyaShrinate
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) March 25, 2024
It’s more shocking as it comes from another woman. Do not forget you are born to a mother and you are a mother too. Probably when you are sure of losing, one tends to go to any extent to please… pic.twitter.com/z0GpNFPIB8
Dear Supriya ji
— Kangana Ranaut (@KanganaTeam) March 25, 2024
In the last 20 years of my career as an artist I have played all kinds of women. From a naive girl in Queen to a seductive spy in Dhaakad, from a goddess in Manikarnika to a demon in Chandramukhi, from a prostitute in Rajjo to a revolutionary leader in Thalaivii.… pic.twitter.com/GJbhJTQAzW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout