நீங்கள் தேர்வு செய்த வழி சரியானது: பிசி ஸ்ரீராமுக்கு கங்கனா பதிலடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகிறார். சுஷாந்த் தற்கொலை உள்பட அவர் கூறிய சில கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அவருடைய வீடு இடிக்கப்பட்டது என்பதும் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் தனது டுவிட்டரில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கும் படத்தை நான் நிராகரித்துவிட்டேன். இது குறித்து எனது நிலைப்பாட்டை தயாரிப்பாளரிடமும் விளக்கிவிட்டேன். அவர்களும் புரிந்து கொண்டார்கள் என்றும் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்திருந்தார்
பிசி ஸ்ரீராம் அவர்களின் இந்த டுவீட்டுக்கு பதிலடி கொடுத்த நடிகை கங்கனா ரனாவத் ’உங்களை போன்ற மேதைகளுடன் பணிபுரியும் வாய்ப்பினை இழந்து விட்டது உண்மையில் எனக்கு மிகப்பெரிய இழப்புதான். என்னை பற்றி உங்களுக்கு தர்மசங்கடமான எண்ணம் ஏற்பட என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் சரியான வழியில் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதில் எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். கங்கனாவின் இந்த டுவீட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
I missed the opportunity to work with a legend like you sir, it’s entirely my loss, I don’t know what exactly made you uneasy about me but I am glad you took the right call, wish you all the best ????
— Kangana Ranaut (@KanganaTeam) September 8, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments