மம்தா பானர்ஜியை ஒடுக்க வேண்டும்… டிவிட்டரில் சர்ச்சையை கிளப்பும் பாலிவுட் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பது தெரிந்ததுதான். அவர் சார்ந்து இருக்கும் கொள்கைகளால் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் நடிகை கங்கனாவின் சமூக வலைத்தளப் பக்கங்கள் இதற்கு முன்பே பல தடவை முடக்கப்பட்டு உள்ளது. தற்போது அதேபோல ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்து இருக்கிறது.
நடிகை கங்கனா ரனாவத் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் மம்தா பானர்ஜியை பிரதமர் மோடி ஒடுக்க வேண்டும் என்றும் சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார். இந்தப் பதிவு வன்முறைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி அவருடைய டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இந்த வாக்கு எண்ணிக்கையில் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 2 முறை ஆட்சியைப் பிடித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தற்போது 3 ஆவது முறையும் ஏகபோக வெற்றிப் பெற்றுள்ளார். 294 தொகுதி கொண்ட அந்த மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கான வெற்றிக் கொண்டாட்டத்தை ஒட்டி பாஜக அலுவலகத்திற்கு சிலர் தீ வைத்ததாகவும் இதுவரையில் பாஜகவை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டதாகவும் பாஜக சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை அடுத்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது டிவிட்டர் பக்கத்தில், “பாஜக வெற்றி பெற்ற அசாம், புதுச்சேரி மாநிலங்களில் வன்முறை நிகழவில்லை. ஆனால் மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்கிறது. மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும். பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை ஒடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
அதேபோல கொரோனா ஊரடங்கின் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு சாப்பாடு மற்றும் போக்குவரத்துக்கு உதவி செய்த நடிகர் சோனு சூட் குறித்தும் நடிகை கங்கனா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டு உள்ளார். அதாவது, “அவர் ஒரு மோசடி பேர்வழி அவர் உதவுவது பணம் சம்பாதிக்கத்தான்” என நடிகை கங்கனா பதிவிட்டு இருப்பது தற்போது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை கங்கனாவின் இந்த பதிவுகளைத் தொடர்ந்து வன்முறை மற்றும் போலி செய்திகளை தொடர்ந்து பகிர்ந்து வருவதாகக் கூறி டிவிட்டர் நிறுவனம் அவரது கணக்கை முடக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments