மம்தா பானர்ஜியை ஒடுக்க வேண்டும்… டிவிட்டரில் சர்ச்சையை கிளப்பும் பாலிவுட் நடிகை!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பது தெரிந்ததுதான். அவர் சார்ந்து இருக்கும் கொள்கைகளால் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் நடிகை கங்கனாவின் சமூக வலைத்தளப் பக்கங்கள் இதற்கு முன்பே பல தடவை முடக்கப்பட்டு உள்ளது. தற்போது அதேபோல ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்து இருக்கிறது.

நடிகை கங்கனா ரனாவத் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் மம்தா பானர்ஜியை பிரதமர் மோடி ஒடுக்க வேண்டும் என்றும் சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார். இந்தப் பதிவு வன்முறைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி அவருடைய டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இந்த வாக்கு எண்ணிக்கையில் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 2 முறை ஆட்சியைப் பிடித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தற்போது 3 ஆவது முறையும் ஏகபோக வெற்றிப் பெற்றுள்ளார். 294 தொகுதி கொண்ட அந்த மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கான வெற்றிக் கொண்டாட்டத்தை ஒட்டி பாஜக அலுவலகத்திற்கு சிலர் தீ வைத்ததாகவும் இதுவரையில் பாஜகவை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டதாகவும் பாஜக சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை அடுத்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது டிவிட்டர் பக்கத்தில், “பாஜக வெற்றி பெற்ற அசாம், புதுச்சேரி மாநிலங்களில் வன்முறை நிகழவில்லை. ஆனால் மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்கிறது. மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும். பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை ஒடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டு இருக்கிறார்.

அதேபோல கொரோனா ஊரடங்கின் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு சாப்பாடு மற்றும் போக்குவரத்துக்கு உதவி செய்த நடிகர் சோனு சூட் குறித்தும் நடிகை கங்கனா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டு உள்ளார். அதாவது, “அவர் ஒரு மோசடி பேர்வழி அவர் உதவுவது பணம் சம்பாதிக்கத்தான்” என நடிகை கங்கனா பதிவிட்டு இருப்பது தற்போது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை கங்கனாவின் இந்த பதிவுகளைத் தொடர்ந்து வன்முறை மற்றும் போலி செய்திகளை தொடர்ந்து பகிர்ந்து வருவதாகக் கூறி டிவிட்டர் நிறுவனம் அவரது கணக்கை முடக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More News

நினைத்து கூட பார்க்க முடியாத அதிசயம்: ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்த சீரியல் நடிகை!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களுடன் சீரியல் நடிகை ஒருவர் பணிபுரிந்தது நினைத்து பார்க்க கூட முடியாத அதிசயம் என கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன

நிரம்பி வழியும் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்: மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும்

வந்துவிட்டது சுட்டெரிக்கும் கத்திரி வெயில்… என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

மே மாதம் வந்துவிட்டாலே ஒவ்வொருவருக்கும் கொணட்டாம்தான். காரணம் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு கிடைக்கும்.

அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர்… தலைமை செய்தது என்ன?

சென்னை முகப்பேர் கிழக்கு ஜேஜே நகர் பகுதியில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தை திமுகவினர் சிலர் அடித்து நொறுக்கியதாகச் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது.

பாலம் உடைந்து மெட்ரோ ரயில், சாலையில் சரிந்த கொடூரம்… பதைக்க வைக்கும் வீடியோ!

வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ சிட்டியில் ஒரு மெட்ரோ ரயில் பாலம் உடைந்ததால் ஓடிக்கொண்டு இருந்த ரயில் பாலத்தோடு சேர்ந்து சாலையில் விழுந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்து உள்ளது.