ஜெயலலிதா கேரக்டருக்கு அவர் செட்டாக மாட்டார்: ஸ்ரீரெட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை 'தலைவி' என்ற டைட்டிலில் பிரபல இயக்குனர் விஜய் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் பரிசீலனையில் இருந்தபோதும் இறுதியில் அவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை தேர்வு செய்தார். கங்கனா நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான்
இந்த நிலையில் 'ஜெயலலிதா கேரக்டருக்கு கங்கனா' பொருந்தமாட்டார் என்று நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, 'இரும்புப்பெண்மணி என்ற பெயர் பெற்ற ஜெயலலிதா கட்சியையும் ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவருக்கு இணையாக யாரும் இல்லை. எனக்கு தெரிந்து ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க பொருத்தமானவர்கள் யாரும் இல்லை. அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பது ரொம்ப முக்கியமானது. அவரை பற்றி எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த படம் இருக்க வேண்டும்.
ஜெயலலிதா கேரக்டருக்கு கங்கனா பொருத்தமானவர் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. அவருக்கு பதிலாக தென்னிந்திய நடிகைகளில் யாராவது ஒருவரை தேர்வு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார். ஜெயலலிதாவின் கேரக்டருக்கு கங்கனா தேர்வு செய்ததை ஏற்கனவே ஒருசிலர் விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments