close
Choose your channels

பெண்மைக்கே விலை பேசுவதா? நடிகர் கமல்ஹாசனை வம்பிற்கு இழுக்கும் பிரபல நடிகை!!! வைரலாகும் விவாதம்…

Wednesday, January 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியை தொடங்கியதில் இருந்தே பெண்கள் மேம்பாடு குறித்த கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அதோடு வீட்டை பராமரித்து கொண்டு சேவையாற்றி வரும் பெண்களின் பொருளாதாரத்தைப் பற்றியும் அவர் கருத்து வெளியிட்டு வந்தார். தற்போது 2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், “நமது நாட்டில் மட்டுமே பெண்களை பல வழியில் போற்றுகிறோம். அவர்களுக்கு என தனித்திறமை உள்ளதை அனைவருமே உணர்ந்துள்ளோம். ஒவ்வொரு துறையிலும் பெண்கள் சாதனையாளர்களாக உள்ளனர். அதை யாரும் மறுக்க முடியாது.

அதுமட்டுமல்ல வீட்டில் பல வேலைகளை முன்னின்று செய்பவர்களும் தாய்மார்கள்தான். எனவே மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படும். இது வெறும் தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல, உலகம் எங்கும் உள்ள நேர்மையான ஆண்கள் தாயை வழிபடுபவர்கள். இதைப்பற்றி யோசித்து வருகின்றனர். அதை நாங்கள் செயல்படுத்த உள்ளோம்” என்றார். இந்தக் கருத்து பெண்களுக்கான பொருளாதாரத்தை உறுதி செய்வதாக இருக்கிறது எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி யான சஷி தரூரும் தனது டிவிட்டரில் இத்திட்டத்திற்குப் பாராட்டு தெரிவித்து கருத்து வெளியிட்டு இருந்தார். அதில், நான் நடிகர் கமல்ஹாசனின் கருத்தை வரவேற்கிறேன். வீட்டு வேலைகளை சம்பளத் தொழிலாக அங்கீகரிப்பதற்கான யோசனை வரவேற்கத்தக்கது. வீட்டுத் தயாரிப்பாளர்களுக்கான ஊதியத்தை வழங்கினால் பெண்கள், இல்லத்தரசிகளின் சேவைகளை அங்கீகரிப்பதோடு அதை பணமாக்கினால் அவர்களின் வாழ்வாதாரமும் சுயாட்சியும் மேம்படும் என்கிற ரீதியில் கருத்து வெளியிட்டு இருந்தார்.

ஆனால் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுத்து நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டு உள்ள டிவிட் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த டிவிட்டில் பெண்களின் சேவைக்கு பணமா? எல்லாவற்றையும் வியாபரமாக்க நினைக்காதீர்கள் என்று கருத்து வெளியிட்டு உள்ளார். இந்த விவாதம் தற்போது டிவிட்டரில் சூடுபிடித்து இருக்கிறது. அதோடு அரசியல் மட்டத்தில் இது மேலும் சர்ச்சையை உருவாக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த விவாதத்தில் சஷி தரூரின் கருத்துக்கு பதில் அளித்த நடிகை கங்கனா, “எங்கள் அன்புக்குரியவரோடு நாங்கள் கொள்ளும் உடலுறவுக்கு விலை வைக்காதீர்கள். எங்கள் தாய்மைக்கு விலை நிர்ணயம் செய்யாதீர்கள். எங்கள் சொந்த சிறிய ராஜ்யத்தின் ராணிகளாக இருப்பதற்கு எங்களுக்கு சம்பளம் தேவையில்லை. எல்லாவற்றையும் வியாபாரமாக பார்ப்பதை நிறுத்துங்கள். உங்கள் பெண்ணிடம் சரணடையுங்கள். உங்களை முழுமையாக அவள் எதிர்பார்க்கிறாள். உங்கள் அன்பு/ மரியாதை/ சம்பளம் மட்டும் அவளுக்கு தேவையல்ல” என்று நேற்று தனது டிவிட்டரில் பதிலடி கொடுத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

I welcome @ikamalhaasan’s idea of recognising housework as a salaried profession, w/the state govt paying a monthly wage to homemakers. This will recognise & monetise the services of women homemakers in society, enhance their power& autonomy & create near-universal basic income.

— Shashi Tharoor (@ShashiTharoor) January 5, 2021

Don’t put a price tag on sex we have with our love, don’t pay us for mothering our own, we don’t need salary for being the Queens of our own little kingdom our home,stop seeing everything as business. Surrender to your woman she needs all of you not just your love/respect/salary. https://t.co/57PE8UBALM

— Kangana Ranaut (@KanganaTeam) January 5, 2021

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment