சமந்தா-நாகசைதன்யா பிரிவுக்கு இந்த பிரபல நடிகர் காரணமா? கங்கனாவின் சர்ச்சை பதிவு!
- IndiaGlitz, [Sunday,October 03 2021]
விவாகரத்து நிபுணர் என்று அழைக்கப்படும் இந்த பாலிவுட் நடிகரை நாகசைதன்யா சந்தித்தவுடன் தான் விவாகரத்து அறிவிப்பு வெளியாகி உள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா நேற்று அதிகாரபூர்வமாக தங்கள் பிரிவை அறிவித்தனர் என்பதை பார்த்தோம். இந்த அறிவிப்பு தமிழ் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்த விவகாரம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய ஒரு பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் தெற்கு நடிகர் ஒருவர் நான்கு வருடங்கள் மற்றும் ஒரு தசாப்தத்திற்கு மேலாக நடிகை ஒருவருடன் உறவில் இருந்தார். சமீபத்தில் அவர் பாலிவுட் நடிகர் ஒருவரை தொடர்பு கொண்டார். விவாகரத்து நிபுணர் என்று அழைக்கப்படும் அந்த நடிகரை சந்தித்தவுடன் தான் நாக சைதன்யா விவாகரத்து முடிவை எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். கங்கனா கூறும் அந்த விவாகரத்து நிபுணர் நடிகரும் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நட்புடன் தொடர்வதாக குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அந்த பிரபல நடிகரும் நாக சைதன்யாவும் பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில் இருவரும் நெருக்கமாக உள்ளதாகவும், விவாகரத்து குறித்து அந்த நடிகரிடம் தான் நாக சைதன்யா ஆலோசனை கேட்டதாகவும் அவருடைய ஆலோசனைப்படிதான் சமந்தாவை அவர் பிரிய முடிவு செய்துவிட்டதாகவும் கங்கனா ரனாவத் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.