50, 60 ரூபாய்க்கே பைத்தியமாக அலைபவர்கள் பத்திரிகையாளர்கள்: பிரபல நடிகையின் சர்ச்சை டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பத்திரிகையாளர்களை மறைமுகமாக தாக்கியுள்ளார். அவர்களை விலைக்கு வாங்க லட்சங்கள் செலவு செய்ய தேவையில்லை என்றும், ரூ.50, ரூ.60க்கே பைத்தியமாக அலைபவர்கள் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் கங்கனா ரனாவத் நடித்த 'ஜட்ஜ்மென்டல் ஹை கியா? ((JudgeMentall Hai Kya?) என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களிடம் கங்கனா உரையாடியபோது ஒருசில பத்திரிகைகள் தன்னுடைய 'மணிகர்னா' படத்தை மோசமாக விமர்சனம் செய்ததாக குற்றஞ்சாட்டினார். இதனால் பத்திரிகையாளர்களுக்கும் கங்கனாவுக்கும் வாக்குவாதம் எழுந்தது. இதனையடுத்து இனிமேல் கங்கனா குறித்த செய்தியைப் புறக்கணிக்கப் போவதாக பொழுதுபோக்குப் பத்திரிக்கையாளர்கள் சங்கம் அறிவித்தது
இதன்பின்னர் 'ஜட்ஜ்மென்டல் ஹை கியா? படத்தின் தயாரிப்பு நிறுவனம் பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்தது. ஆனால் கங்கனா மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதுமட்டுமின்றி பத்திரிகையாளர்களை மோசமாக விமர்சனம் செய்தும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளதால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments