எம்பி ஆனதும் விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய கங்கனா ரனாவத்.. அதிரடி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி என்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்று எம்பி ஆனார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் எம்பி ஆனவுடன் அவர் விஜய்க்கு போட்டியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கங்கனா ரனாவத் நடித்து இயக்கிய ‘எமர்ஜென்சி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த சில மாதங்களாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வந்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான இதில், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சி குறித்த கதை அம்சம் தான் இந்த படம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தளத்தில் ’எமர்ஜென்சி’ திரைப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே செப்டம்பர் 5ஆம் தேதி விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு மறுநாள் கங்கனா ரனாவத் நடித்து இயக்கிய ‘எமர்ஜென்சி’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கனா ரனாவத் மற்றும் அனுபம் கெர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும் கங்கனா ரனாவத் தயாரித்து இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The Beginning of the 50th Year of Independent India's Darkest Chapter, Announcing #KanganaRanaut’s #Emergency In Cinemas on 6th September 2024.
— Kangana Ranaut (@KanganaTeam) June 25, 2024
The Explosive Saga of The Most Controversial Episode of The History of Indian Democracy,#EmergencyOn6Sept in cinemas worldwide.… pic.twitter.com/6Ufc9Ba7jw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments