இன்னும் ஒரே ஒரு வாரம் தான்: ஜெயலலிதா நினைவு நாளில் கங்கனாவின் பதிவு!

  • IndiaGlitz, [Saturday,December 05 2020]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் நான்கு வருடம் ஆகியுள்ள நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்

அதில் ‘தலைவி’ படத்தின் ஒரு சில ஸ்டில்களை பதிவு செய்துள்ள கங்கனா ரனாவத் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மாவின் நினைவு நாளில் இந்த புகைப்படங்களை பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ‘தலைவி’ படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இயக்குனர் விஜய் அவர்கள் ஒரு மிகச்சிறந்த மனிதராக இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார். இன்னும் ஒரே ஒரு வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது என்றும் கங்கனா ரனாவத் குறிப்பிட்டுள்ளார்

கங்கனா ரணாவத் பதிவு செய்துள்ள ‘தலைவி’ படத்தின் ஸ்டில்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது