6 மாதத்தில் 20கி எடையைக் கூட்டி, குறைத்தேன்… பாலிவுட் நடிகையின் உருக்கமான பதிவு!

  • IndiaGlitz, [Tuesday,September 28 2021]

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “தலைவி“ திரைப்படத்தில் நடித்திருந்ததும் அந்தப் படம் தற்போது திரையில் ஓடிக்கொண்டிருப்பதும் நமக்கு தெரிந்ததுதான்.

இந்நிலையில் “தலைவி“ திரைப்படத்திற்காக நடிகை கங்கனா தான் பட்ட கஷ்டங்களைத் தற்போது உருக்கமாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் வெறும் 6 மாதத்தில் 20 கிலோ எடையை கூட்டி, பின்பு அதே 6 மாதத்திற்குள் குறைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற விஷயங்களை தன்னுடைய 30 வயதிற்குள் பலமுறை செய்துவிட்டதாகவும் அதனால் மிகுந்த வலியை அனுபவித்தாகவும் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் எடுக்கப்பட்ட “தலைவி“ திரைப்படம் நேரடியாக தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. இந்நிலையில் நடிகை கங்கனா தன்னுடைய கதாபாத்திரத்திற்காக செய்த வெறித்தனமான முயற்சிகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் “6 மாதங்களில் உடல் எடையை அதிகரித்தேன். அதே 6 மாதத்தில் எடையைக் குறைத்தேன். இப்படி என்னுடைய 30 வயதில் என் உடலை பல வழிகளில் தொந்தரவு செய்துவிட்டேன். இதனால் நிரந்தர தழும்புகளையும் அடைந்துள்ளேன். ஆனாலும் இதுபோன்ற உழைப்புதான் கலைக்கு விலையாக இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் அந்த விலை கலைஞனுக்கு பலன் தருவதில்லை“ என நடிகை கங்கனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதுபோன்ற உடல் எடை குறைப்பின்போதும் அதிகரிப்பின்போதும் எடுத்துக் கொண்ட உணவுமுறைகளை குறித்து நடிகை கங்கனா பதிவு செய்யவில்லை. ஆனால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட சில பதிவுகளில் இருந்து அவர் தினமும் 45 நிமிடங்கள் யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல வாரத்திற்கு 5 நாட்கள் கட்டாயம் வொர்க் அவுட் செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.