close
Choose your channels

கங்கனாவின் ‘தலைவி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Monday, August 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளதால் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தலைவி’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படம் ரிலீஸ் செய்ய வேண்டும் என படக்குழுவினர் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் ‘தலைவி’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. தற்போது தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தற்போது திரையரங்குகளில் திறக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

குறிப்பாக செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தில் இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘தலைவி’ படம் மட்டுமன்றி விஜய் சேதுபதியின் ’லாபம்’, ஹிப் ஹாப் தமிழாவின் ’சிவகுமாரின் சபதம்’, விஜய் ஆண்டனியின் ’கோடியில் ஒருவன்’, உள்பட ஒரு சில திரைப்படங்களும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment