ரிலீசுக்கு முன்பே 9 சர்வதேச விருது வாங்கிய 'கண்டதை படிக்காதே' திரைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் ஜோதி முருகன் இயக்கத்தில் நடிகர் ஆதித்யா, சுஜி, சீனிவாசன், வைஷாலி, ஜெனி பெர்னாண்டஸ் ஆகியோர் நடித்துள்ள ‘கண்டதை படிக்காதே‘ திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே 9 தேசிய விருதுகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
பேய், அமானுஷ்யங்கள் போன்ற திர்ல்லர் வகையான கதைகளுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் அமானுஷ்யம் மற்றும் திரில்லர் கலவையாக உருவாகியுள்ள ‘கண்டதை படிக்காதே’ திரைப்படம் இந்த மாதம் 30 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் 11 வெளிநாடுகளில் நடைபெற்ற பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு தற்போது 9 சர்வதேச விருதுகளை வாங்கி குவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ஜோதி முருகன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஆதித்யா, சுஜி, சீனிவாசன், வைஷாலி, ஜெனி பெர்னாண்டஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் புல்லி மூவிஸ் சார்பில் எஸ்.சத்யநாராயணன் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில் தயாரிப்பாளரே ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
செல்வா ஜானகிராஜ் இசையமைப்பில் மஹிபாலன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் போன்ற பகுதிகளில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
கதைப்படி ஒர் எழுத்தாளர் ஒரு திகில் கதையை எழுத அதை அவருடைய பேத்தி நிஷா படித்துவிட்டு இணையத்தில் பதிவிடுகிறார். இதனால் நிஷா இறந்துபோன நிலையில் அந்தக் கதையைப் படிக்கும் அனைவரும் மர்மமாக இறந்து போகின்றனர். அப்படி நடக்கும் இந்த மர்மத்திற்கு பின்னால் இருப்பதை இன்ஸ்பெக்டர் சிவராமன் தேடிச்செல்கிறார். அந்தத் தேடலுக்கு பின்னால் இருப்பதுதான் ‘கண்டதைப் படிக்காதே’ திரைப்படத்தின் ஒட்டுமொத்த கதையும்.
இந்நிலையில் அமானுஷ்யம் பொருந்திய ‘கண்டதை படிக்காதே’ திரைப்படம் 9 சர்வதேச விருதுகளை வாங்கி குவித்துள்ளதால் ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout