அடுத்த எம்ஜிஆர் ஆகிறாரா விஜய்? ரசிகர்களின் போஸ்டர்களால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக போஸ்டர் போர் அரசியல்வாதிகளுக்கு இடையில்தான் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் இடையேயும் நடந்து வருகிறது. குறிப்பாக அஜித், விஜய் ரசிகர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய நடிகருக்கு ஆதரவாக ஒட்டும் போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக விஜய் ரசிகர்கள் தங்கள் கற்பனை குதிரைகளை பறக்கவிட்டு விஜய்யை வெவ்வேறு வடிவங்களில் போஸ்டர்கள் சித்தரித்து ஒட்டி வருகின்றனர். அந்த வகையில் எம்ஜிஆர் போன்ற தோற்றத்தில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே நாளைய தமிழகமே, நாளைய முதல்வரே, ஆளப்போறான் தமிழன் 2021ல்’ போன்ற போஸ்டர்களை ஒட்டி மதுரை விஜய் ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சென்னை காஞ்சிபுரம் விஜய் ரசிகர்கள், மக்கள் திலகத்தின் மறு உருவமே விரைவில் வருக நல்லாட்சி தருக என்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கமல், ரஜினியை அடுத்து விஜய்யும் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிப்பார் என அரசல்புரசலாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் எம்ஜிஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, உரிமைக்குரல்’, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ பட பாணியில் விஜய்யின் போஸ்டர்கள் காண்போரை கவர்ந்து வருகிறது. நடிகர்களின் இவ்வகை போஸ்டர்கள் அவர்களது ரசிகர்களை கவர்ந்தாலும் பொதுமக்களை, வாக்காளர்களை கவருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments