'காஞ்சனா 3' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 20 2019]

ராகவா லாரன்ஸ், ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 'காஞ்சனா 3' திரைப்படம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது தொடங்கப்படவுள்ளது.

அதன் முதல்கட்டமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடல் வரும் 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, கபீர்சிங், மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, சத்யராஜ், கிஷோர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.