ரஜினியுடன் முதல்முறையாக இணையும் ராகவா லாரன்ஸ்

  • IndiaGlitz, [Saturday,December 22 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெற்று வரும் பொங்கல் தினத்தில் வெளியாக தயார் நிலையில் உள்ளது. மேலும் இந்த படத்தின் புரமோஷ்ன்களும் முழு வேகத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பொங்கல் தினத்தில் 'பேட்ட' திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும், சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இன்னொரு படமான 'காஞ்சனா 3' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி படத்துடன் முதல்முறையாக ராகவா லாரன்ஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ள 'காஞ்சனா 3' படத்தில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, கபீர்சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெற்றி ஒளிப்பதிவில் எஸ்.தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

 

More News

'பங்கு' பக்கத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே! 'கனா' படம் குறித்து சூரி

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த 'கனா' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வருகிறது.

இளையராஜா மீது தயாரிப்பாளர்கள் வழக்கு

தனது பாடல்களை பொது நிகழ்ச்சிகளில், மேடைகளில் பாடுபவர்கள் தனக்கு ராயல்டி தரவேண்டும் என்று இளையராஜா கூறி வருவது தெரிந்ததே.

'தளபதி 63' இயக்குனர் அட்லியை சந்தித்த 'பேட்ட' டெக்னீஷியன்

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் புரடொக்சன் டிசைனராக பணிபுரிந்த சுரேஷ் செல்வராஜன், நீண்ட இடைவெளிக்கு பின் தனது நெருங்கிய நண்பரும் 'தளபதி 63' பட இயக்குனருமான அட்லியை சந்தித்துள்ளார்.

ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் டிவியின் பெயர் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார்...

கஜா புயல் எதிரொலி: கடனை தள்ளுபடி செய்த டீக்கடைக்காரர்

இந்த நிலையில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஒன்றில் டீக்கடை வைத்திருக்கும் ஒருவர் தன்னுடைய கடையில் வாடிக்கையாளர்கள்...