விவேக்கிற்கு ஜோடியாக நடிக்க மறுத்த கனகா.

  • IndiaGlitz, [Saturday,May 04 2024]


இயக்குனர் வி சேகர் அவர்கள் கதாநாயகிகள் என்ற தலைப்பில் INDIA GLITZ க்கு அளித்த பேட்டியில், நான் எப்பொழுதும் மூன்று கதாநாயகர்கள் மூன்று கதாநாயகிகள் உள்ள கதை உள்ள படமாக தான் எடுப்பேன்.

ஏனென்றால் ஒருத்தருக்கு மார்க்கெட் இல்லாவிட்டாலும் மற்றவருக்கு மார்க்கெட் இருக்கும்.அதை வைத்து படத்தை விற்று விடலாம்.அதேபோல் நான் எடுத்த விரலுக்கேத்த வீக்கம் படத்தில் லிவிங்ஸ்டன் க்கு குஷ்பூ, வடிவேலுக்கு கோவை சரளா, விவேக்கிற்கு யாரை ஜோடியாக போடலாம்? என்று ஒரு ஆலோசனை செய்த போது எனது உதவியாளர்கள் கனகாவை ஜோடியாக போடலாம் என்றார்கள்

.அதற்கு நான் சொன்னேன். இப்பொழுது தான் கரகாட்டக்காரன் படம் வெளிவந்து தமிழ் சினிமாவில் அதிக வசூலை பெற்ற படமாக இருக்கிறது.அந்த பொண்ணு எப்படி நடிப்பாங்க என்று கேட்டேன்.அதற்கு எங்களிடம் ஆலோசராக இருந்த மாணிக்கம் என்பவர் நான் தேவிகாவை சந்தித்து பேசுகிறேன் என்று சென்றார்.

 

ஆனால் அதற்கு தேவிகா நடிக்கவில்லை என மறுத்துவிட்டார். பிறகு நான் கனகாவின் அம்மா தேவிகாவிடம் பேசினேன். அதற்கு அவர்கள் விவேக்கிற்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் என் மகள் நிச்சயமாக நடிக்க மாட்டார் என்று கூறிவிட்டார்.