500 ஐடி இளம்பெண்களுக்காக திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,January 02 2019]

சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் 'கனா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களும், பெண் குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் என பெரும்பாலான விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம் தான் கனா

இந்த நிலையில் ஒரு பெண்ணின் கனவு நனவாகும் கதையம்சம் கொண்ட இந்த படம் சமீபத்தில் ஐடி துறையில் பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு காட்சி ஒன்று திரையிடப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட ஐடி பெண்கள் கலந்து கொண்டு படம் பார்த்து, படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்

இந்த படம் தங்களின் நிறைவேறாத கனவை நிறைவேற்றும் அளவுக்கு தன்னம்பிக்கை கொடுத்ததாகவும், ஒவ்வொரு பெண்ணும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும் படம் பார்த்த பெண்கள் கருத்து தெரிவித்தனர். ஒரு திரைப்படம் வசூல் அளவில் மட்டும் வெற்றி பெறாமல் படம் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிலும் பதியும் அளவுக்கு நல்ல கருத்தை கூறிய இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.