உன்னை வெல்ல யாரும் இந்த மண்ணில் இல்லை: 'கனா' பாடல் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் வரும் 21ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் இடம்பெற்ற 'உன்னை விட்டால் உன்னை வெல்ல யாரும் இந்த மண்ணில் இல்லை' என்ற பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடலில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் எடுத்து கொண்ட கிரிக்கெட் வீராங்கனை கேரக்டரை எந்த அளவுக்கு நேசித்து நடித்துள்ளார் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ஒரு காட்சியில் கூட டூப் இன்றி அவர் எடுத்து கொண்ட கடினமான பயிற்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றது.
கிரிக்கெட் விளையாட்டில் குறுகிய காலத்தில் பயிற்சி பெறுவது என்பது மிகவும் கடினமான விஷயம். அதிலும் பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என மூன்று துறையிலும் ஐஸ்வர்யா எடுத்து கொண்ட பயிற்சிகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக பாடலின் முடிவில் மிடில்ஸ்டிக் விழும்படியான பந்துவீசுவது என்பது பல வருடங்கள் பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே சாத்தியம். ஐஸ்வர்யாவின் உழைப்புக்கேற்ற வெற்றி கண்டிப்பாக கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
திபுநிணன் தாமஸ் இசையில், சித் ஸ்ரீராம்-நிரஞ்சனா ரமணன் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com