'இசைஞானி' இசைக்கு பாடல் எழுதிய 'கனா' பாடலாசிரியர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான 'கனா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் அந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் ஒரு திருப்புமுனை கிடைத்தது என்றால் அது மிகையில்லை
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'வாயாடி பெத்த புள்ள' என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் இந்த பாடலை சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலட்சுமி மற்றும் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா ஆகியோர் பாடியிருந்தனர் என்பதும் தெரிந்ததே. மிகப்பெரும் வரவேற்பை பெற்ற இந்த பாடலை ஜிகேபி என்ற பாடலாசிரியர் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் பாடலாசிரியர் ஜிகேபி தற்போது இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வரும் படம் ஒன்றிற்கு பாடல் எழுதியுள்ளார். இசைஞானியின் இசையில் பாடல் எழுதியது தனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்றும், அவருடைய ஆசியை பெற்றது நான் செய்த பெரும் அதிர்ஷ்டம் என்றும் ஜிகேபி தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இசைஞானியுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். இசைஞானியின் இசைக்கு பாடல் எழுதிய ஜிகேபிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
Happy wite a song for the legendary Isaigani Ilaiyaraja Sir. Truely blessed with his presence.❤ Thanks to my universe. pic.twitter.com/CN9QJ7SMkE
— GKB (@gkblyrics) July 22, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com