கனா காணும் காலங்கள்' சீரிஸின், அடுத்த சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,August 08 2024]

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மிகவும் பிரபலமான வெப் சீரிஸான ​​'கனா காணும் காலங்கள்' சீரிஸின், அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இளமைக் கால நினைவுகளை போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான கனா காணும் காலங்கள் சீரிஸின், முதல் இரண்டு சீசன்களின் அற்புதமான வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தற்போது ​​'கனா காணும் காலங்கள்' சீரிஸின் அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'கனா காணும் காலங்கள்' முதலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதைக்களம், மக்கள் மத்தியில் உடனடி ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த சீரிஸ் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர்களது வாழ்வியலைக் காட்டியதால், மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது.

வெப் சீரிஸின் முதல் சீசனுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்த நிலையிலும், அடுத்தடுத்த எபிசோடுகளுக்காக ரசிகர்களிடமிருந்து பெருமளவிலான கோரிக்கைகள் குவிந்ததையும் அடுத்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், கடந்த ஆண்டு ஏப்ரல் 21 அன்று, இந்த சூப்பர்ஹிட் சீரிஸின், இரண்டாவது சீசனை வெளியிட்டது.

இரண்டாம் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம், பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகும், இந்த சீரிஸின் மூன்றாவது சீசனை வெளியிட முடிவு செய்துள்ளது.

முதல் மற்றும் இரண்டாவது சீசன்களை போலவே, இந்த சீசனும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் , இன்றைய மாணவர்களின் வாழ்வின் மகிழ்ச்சிகள், கண்ணீர், அச்சங்கள், ஆச்சரியங்கள், வலிகள் மற்றும் சிலிர்ப்புகள் என அனைத்தையும் படம்பிடித்துக் காட்டும்படி உருவாகவுள்ளது.

இந்த சீரிஸில் நடிக்கவுள்ள நடிகர்கள், குழுவினர் மற்றும் இந்த சீரிஸ் பற்றிய விவரங்களை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

More News

'வேட்டையன்' போஸ்டரை திடீரென வெளியிட்ட லைகா.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' திரைப்படத்தின் ஸ்டில் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய்யின் தவெக முதல் மாநாடு எங்கே? புதிய தகவல்..!

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில்

நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம்.. பொன்னியின் செல்வன் நடிகை தான் மணமகள்..!

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா மற்றும் பிரபல நடிகை இடையே திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகரானார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணன்.. எப்படி சம்மதிக்க வைத்தார் இயக்குனர்?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் அவர்களை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்த நிலையில் அவர்களுக்கெல்லாம் நோ சொன்ன அவர்

'மார்க் ஆண்டனி' டீம் உடன் இணையும் ஆர்யா.. பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்..!

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடித்த 'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளார்.