கமுதி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு அரிவாள் வெட்டு… முன்விரோதம் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு ஒரு கும்பல் தப்பியுள்ளது. இந்தச் சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கமுதி அடுத்த மரக்குளம் எனும் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தசாமி. இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். இவரது மனைவி கலையரசி, மகன் சந்தான பாரதி. இவர்களைத் தவிர பள்ளி தலைமை ஆசிரியர் சசி. உறவினர்கள் ராக்கு, இன்பத்தமிழ் எனும் 6 பேரையும் முன்விரோதம் காரணமாக ரஞ்சித் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
வெட்டுக்காயங்களால் பாதிக்கப்பட்ட இந்த 6 பேரையும் கமுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ரஞ்சித் என்பவர் தனது வீட்டின் முன்பு கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக கோவிந்தசாமியுடன் நேற்று தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
இந்த தகராறை அடுத்து இன்றைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் இந்த 6 பேரின் நிலைமை குறித்த தகவல் எதுவும் வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments