அன்று எந்த முதலமைச்சரிடம் சென்றீர்கள்: கமீலா நாசர் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த சில மாதங்களாகவே விஷாலுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஒரு குழுவினர் சுமத்தி வந்த நிலையில் நேற்று உச்சகட்டமாக சங்கத்திற்கு பூட்டு போடும் அளவிற்கு விஷயம் சீரியஸ் ஆனது. இன்று பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது செய்யப்பட்டுள்ளதால் அடுத்து என்ன நடக்கும்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சங்க தலைவர் நாசர் மனைவியும் கமல்ஹாசான் கட்சியின் நிர்வாகியுமான கமீலா நாசர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
"நம்முடைய பிரச்சினையை தீர்க்க நமக்குள் ஒற்றுமை இல்லையா ? அனுபவம் இல்லையா? துணிவு இல்லையா? 2006 தேர்தலில் நடந்தது என்ன? அன்று ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தை என்ன செய்தீர்கள். வாக்குப் பெட்டியை உடைத்து வாக்குச் சீட்டுகள் காற்றில் பறந்தன. கிழிக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தை நள்ளிரவு வரை வைத்து மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டது. அப்போது எந்த முதலமைச்சரிடம் சென்றீர்கள்? அன்றே ஜனநாயகப் படுகொலையை நிறுத்தியிருந்தால் இன்று தயாரிப்பாளர் சங்கம் உருப்பெற்றிருக்கும். இதுபற்றி யார் பேசப் போகிறீர்கள்? 2006க்கு பின்வந்த தயாரிப்பாளரிடம் இதைப்பற்றி யார் சொல்ல போகிறார்கள்."
இவ்வாறு கமீலா நாசர் கேள்வி எழுப்பி உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout