மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகியது ஏன்? கமீலா நாசர் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக இன்று காலை நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் அறிவித்திருந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கமீலா நாசர் விடுவிக்கப்படுவதாகவும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்படுவதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து அறிக்கை ஒன்றை கமீலா நாசர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

என் சொந்த பணிகள் காரணம் கருதி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். இந்த நேரத்தில் அரசியல் கற்றுத் தந்த ஆசான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் மற்றும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன். என்னோடு பயணித்த கட்சி தொண்டர் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாள் பொக்கிஷமாக கருதி விடை பெறுகிறேன்’ என்று கூறியுள்ளார்

More News

தமிழ் திரையுலகின் இளம் நடிகைக்கு கொரோனா பாதிப்பு: மூச்சுத்திணறல் என டுவிட்டரில் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் இளம் நடிகை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் இந்த பாதிப்பில் இருந்து தான் மீண்டு வருவேன் என சமூக வலைதளத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் 

மன்சூர் அலிகானின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: கைது செய்யப்படுவாரா?

கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆதாருடன் பான் கார்டை இணைக்காமல் விட்டால் என்ன நடக்கும்? விளக்கம் அளிக்கும் வீடியோ!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பான் கார்ட் வைத்து இருக்கும் இந்திய குடிமகன்கள் அனைவரும் கட்டாயம் தங்களது பான் கார்ட் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு  தெரிவித்து இருந்தது.

பட்டாசு கடை விபத்தில் மகன்களைப் பறிக்கொடுத்த தாய்… ரயில் முன்பாய்ந்த பரிதாபம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் இயங்கி வந்த பட்டாசுக் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு அந்த விபத்தில் கடையின் உரிமையாளர்

நோ எண்ட்ரி போர்ட் மாட்டிய நித்தியானந்தா… இந்தியர்களுக்குமா இந்த அவலம்?

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் 2 ஆவது அலை தீவிரம் பெற்று இருக்கிறது