யார் இந்த செய்தியை பரப்பியது? நாசர் மனைவியின் ஆதங்க பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
யார் இந்த செய்தியை பரப்பியது என்றே எனக்கு தெரியவில்லை என நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நடிகர் நாசர் உடல்நலக்குறைவால் இருப்பதாகவும் அதனால் அவர் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் வதந்தி பரவியது. இந்த வதந்தி காட்டுத்தீ போல் சமூக வலைதளங்களில் பரவி வருவதை அடுத்து நாசரின் மனைவி கமீலா நாசர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் நாசர் உடல்நலக் குறைவாக இருப்பதாகவும் அவர் சினிமாவில் இருந்து விலகப் போவதாகவும் உள்பட பல செய்திகள் பரவி வருகின்றன. நாசர் அவர்களுக்கு உணவு மூச்சு காத்து எல்லாமே சினிமா தான். இதுமாதிரி செய்தியை யார் பரப்புகின்றார்கள் என்று தெரியவில்லை. தயவுசெய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நாசர் உடல்நலம் குறித்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்பதும், அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
News about Nasser’s health, quitting career (acting), etc..etc.. who ever started this, long live, to spin more stories..on more people.. Nasser eats and breathes cinema.. thanks friends and folks for all the concern. DONT SPREAD FALSE NEWS
— Kameela (@nasser_kameela) July 1, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments