நான் என்ன தவறு செய்தேன்? கமல்ஹாசனின் வேதனை டுவீட்
- IndiaGlitz, [Sunday,January 29 2017]
மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பம் முதல் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ஆதரவு கொடுத்தவர்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த போராட்டத்தில் சினிமாக்காரர்கள் நுழைந்து பெயர் தேட வேண்டாம் என்றும், போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியபோது தைரியமாக அதை தட்டிக்கேட்டதும் கமல்ஹாசன் மட்டுமே.
அதுமட்டுமின்றி போலீசாரே வன்முறையில் ஈடுபடும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தனது கண்டனத்தையும் தெரிவித்தார். மேலும் போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் ஓபிஎஸ் உள்பட பலரையும் விமர்சனம் செய்தார்,.
இந்நிலையில் கமல்ஹாசனின் ஆக்கபூர்வமான கருத்துக்களை பார்த்த பலர் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலர் அழைப்பு விடுத்தனர். 'நீங்க அரசியலுக்கு வரணும்ன்னு சொல்லலை, ஆனா வந்தா நல்லாயிருக்கும்' என்று ஒருசிலர் அவருடைய பாணியிலேயே டுவீட் செய்தனர்.
ஆனால் தன்னை அரசியலுக்கு இழுக்கும் அழைப்பிற்கு கமல் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'கேள் தோழனே நண்பனே ஆசானே மூடபக்தனே. உன்னுடன் நிற்கத் துணிந்த எனை அரசியல் தலைவருடனா சேரச் சொல்வாய்? எப்பிழை செய்தேன் இவ்விகழ்வெனைச்சேர? நொந்தேனடா' என்று வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.