கண்ட மாடுகள் எல்லாம் ஆராய்ச்சி மணியை அடிக்க கூடாது. கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதால் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும், கமல் உள்பட அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி புகார் அளித்தது என்பதை நேற்று பார்த்தோம்.
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் கூற நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த கமல், 'பாதிக்கப்பட்ட பசுதான் ஆராய்ச்சி மணி அடித்து நீதி கேட்க வேண்டும். கண்ட மாடுகள் எல்லாம் ஆராய்ச்சி மணியை அடிக்க கூடாது. பிக்பாஸ் நிகழ்ச்சியால் யாராவது பாதிக்கப்பட்டதாக கூறினால் அவர்களுக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்' என்று கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சி 11 வருடங்களாக இந்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. கன்னடத்திலும் ஏற்கனவே ஒளிபரப்பாகியுள்ளது. புகார் கொடுத்தவர்களுக்கு இந்தியும் தெரியாது, கன்னடமும் தெரியாது. வெறும் கலாச்சாரம் மட்டுமே தெரியும் என்பதால் தான் இந்த பிரச்சனை'என்று கூறினார். இருப்பினும் என் மீது புகார் கொடுத்தவர்களும் எனது ரசிகர்கள்தான் என்னை சிறையில் வைத்து அழகு பார்க்க நினைக்கும் ரசிகர்கள்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments