பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமூகத்துக்கு கூறுவது என்ன? கமல் விளக்கம்
- IndiaGlitz, [Thursday,July 13 2017]
பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக சீரழிவை ஏற்படுத்துவதாக புகார் வந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி சமூகத்திற்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்பதை இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல் தனது பேட்டியில் கூறியதாவது:
அடுத்தவர் வீட்டில் நடக்கும் ஒரு சம்பத்தை வைத்துதான் ஒரு அறிவுரையை கூற முடியும். உதாரணமாக அடுத்த வீட்ல புருஷன் பொண்டாட்டியப் அடிக்கறதப்பார்த்தா இந்த மாதிரி எல்லாம் செய்ய கூடாது என்று நம் வீட்டு பிள்ளைகளுக்கு கற்று கொடுப்பார்கள்' என்று கூறினார்.
மேலும் கூடி வாழ்தலால் உளவியல் மாற்றங்கள் நிகழும். கே.பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குனர்கள் 'பணமா பாசமா, பூவா தலையா, எதிர்நீச்சல் போன்ற படங்களில் கூட்டுக்குடும்பத்தில், ஒரே வாழிடத்தில் நடக்கும் சச்சரவுகளைப் பற்றிப் பேசினார்கள். அந்த படங்களில் பாலசந்தர் ஒருவரே திரைக்கதை வசனம் எழுதினார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் அவரவர் வசனங்களை எழுதி கொள்கிறார்கள் அதுதான் வித்தியாசம்' என்று கூறினார் .