ரசிகர்களுக்கு கமல்ஹாசன் புதிய உத்தரவு: அதிர்ச்சியில் ஆட்சியாளர்கள்

  • IndiaGlitz, [Saturday,July 22 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியபோது 'அதற்கு ஆதாரம் இருக்கின்றதா' என்று அமைச்சர்கள் எதிர்க்கேள்வி கேட்டனர். உடனே தன்னுடைய துறை குறித்த ஊழல் ஒன்றை தெரிவித்த கமல்ஹாசன், தனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனைத்து துறைகளின் ஊழல் குறித்து புகார் மனுக்களை டிஜிட்டல் மூலம் அந்தந்த அமைச்சர்களின் இமெயில் முகவரிக்கு அனுப்ப கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் நேற்று திடீரென அமைச்சர்களின் இணையதள பக்கங்களில் இமெயில் மற்றும் தொலைபேசி எண்கள் மறைந்து போனதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் புகார்களை யாருக்கு அனுப்புவது என்ற கேள்வி எழுந்த நிலையில் சற்று முன் கமல்ஹாசன் புதிய அறிக்கை ஒன்றை விடுத்துள்ளா.ர் அதில் அமைச்சர்களின் இணையதள முகவரிகள் மூடப்பட்டதால் புகார்களை லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். மேலும் அவர் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தின் முகவரி, இமெயில் முகவரி, ஃபேக்ஸ் எண் மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ள லஞ்ச தடுப்பு பிரிவு அலுவலகத்தின் விபரங்கள்

முகவரி: எண்.293, எம்.கே.என்.ரோடு, ஆலந்தூர், சென்னை-600016

இமெயில் முகவரி: dv-ac@nic.in

பேக்ஸ் எண்: 22321005 என்ற பேக்ஸ் எண்

தொலைபேசி எண்கள்: 22321090, 22321085, 22310989, 22342142

கமல்ஹாசனின் இந்த புதிய அறிக்கை ஆட்சியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.