கமல் அருமை இப்போதுதான் தெரிகிறது. சமூக வலைத்தளங்களில் வறுத்து எடுக்கப்படும் விஜய் சேதுபதி..!
- IndiaGlitz, [Sunday,December 01 2024]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் எட்டாவது சீசனில் அவர் விலகி கொள்ள அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி இணைந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் சேதுபதி ஆரம்பத்தில் அதிரடியாக போட்டியாளர்களை திணற வைத்தார் என்பதும் விஜய் சேதுபதி கேட்கும் கேள்விகளுக்கு போட்டியாளர்கள் பதில் சொல்ல முடியாமல் அதிர்ச்சி அடைந்ததையும் சில எபிசோடுகளில் பார்த்தோம்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல கமல்ஹாசன் அருமை தெரிவதாகவும் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சரியாக நடத்தவில்லை என்றும் தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுதுகின்றன.
சின்ன விஷயத்தை அவர் பெரிதாக்குகிறார் குறிப்பாக சாம்பார் கிண்ணம் விஷயத்தை 15 முதல் 20 நிமிடங்கள் வரை விசாரித்தார், ஒரே தலைவலி, கமல் அருமை இப்போது தான் தெரிகிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
விஜய் சேதுபதி தன்னை எதிர்த்து நின்று பேசுபவர்களை டார்கெட் செய்கிறார் என்றும் குறிப்பாக முத்து, ஆனந்தி, மஞ்சரி ஆகியவர்களை மடக்கி தனது பக்கம் திருப்ப முயற்சி செய்கிறார் என்றும் கமலிடம் இருந்த ஒரு நடுநிலைத் தன்மை விஜய்சேதுபதியுடன் இல்லை என்றும், கமல் அளவுக்கு நியாயமாகவும் சிறப்பாகவும் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை நடத்த வில்லை என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் விஜய் சேதுபதி தன்னை ஒரு சிறந்த தொகுப்பாளராக வெளிக்காட்டி கொள்ள வேண்டும் என்பதில் தான் கவனமாக இருக்கிறார் என்றும் போட்டியாளர்களை அவர் பேச சரியாக அனுமதிப்பதில்லை என்றும் ஆனால் உண்மையில் ஒரு சிறந்த தொகுப்பாளர் பிறருக்கு பேச இடம் கொடுக்க வேண்டும் அவர்களது பேச்சை கவனமாக கேட்க வேண்டும் அதில் கமல் தான் சிறந்தவர் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து பேசுகின்றனர். அவர் நேர்மையாக பேசினால் போட்டியாளர்களை டார்கெட் செய்கிறார், ரோஸ்ட் செய்கிறார். அவமதிக்கிறார் என்று சொல்கிறார்கள், அவர் சும்மா கேட்டுக் கொண்டே இருந்தால் சுவாரசியம் இல்லை என்று சொல்கிறார்கள், அவர் என்னதான் செய்ய முடியும்? என்றும் சிலர் பதிவு செய்து வருகின்றனர்.