இது இன்னொரு சுதந்திர போராட்டம்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மருத்துவ படிப்பின் கனவு கலைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் துயர முடிவு தமிழகத்தில் உள்ள அனைவரையும் ஆத்திரம் கொள்ள வைத்த நிலையில் கமல்ஹாசன் போன்ற சமூக சிந்தனையுடன் மக்கள் மீது நல்ல அக்கறை கொண்டவர்களுக்கு இருமடங்கு ஆத்திரம் எழுந்துள்ளது. நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுகுறித்து அவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். அவர் கூறியதாவது:
'ஒரு பொண்ணு இறந்து போச்சு! இன்னொரு புள்ள சாககூடாது! நீட் தேர்வுக்கு எதிராக என்னுடன் கற்றவர்கள் அனைவரும் வாருங்கள்.. கைக்கோர்ப்போம். மேலும் நம் இனத்திற்கு துரோகம் செய்பவர்களை பார்த்து இனியும் கையை பிசைஞ்சுட்டு இருக்ககூடாது, கை கோர்த்துட்டு இருக்கவேண்டும்.. நானும் உங்களோடு கைகோர்த்து கொள்கிறேன்...
மூச்சு விடுவதை மட்டுமே சுதந்திரம் என்று எண்ணி கொண்டிருக்க கூடாது. இது இன்னொரு சுதந்திர போராட்டமா? என்று கூறினால் ஆம் என்றே கூறுவேன். இந்த போராட்டத்தில் ஜாதி, இனம், மதம் என்ற பிரிவினை இல்லாமல் அனைவரும் ஒன்று கூடுவோம்'. இந்த விஷயத்தில் தவறு செய்பவர்களை முடிந்தால் திருத்துவோம், இல்லையேல் தள்ளி வைப்போம்.
உலகை தூக்கி சுமக்க நான் அட்லஸ் அல்ல. உலகம் தான் என்னையும் உங்களையும் தாங்கி பிடிக்கின்றது. என்னை தாங்கி பிடியுங்கள்... நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com