திமிறி எழுங்கள்.. 'இந்தியன் 2' படம் பார்த்த பின் ஷங்கருக்கு அறிவுரை கூறிய கமல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வந்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என செய்திகள் வெளியானது. இதனை அடுத்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் 'இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை பார்த்ததாக கூறியுள்ள கமல்ஹாசன் இதையே உச்சமாக கொள்ளாமல் திமிறி எழுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துக்கள் இயக்குனர் ஷங்கருக்கு.
இதுவே உங்கள் உச்சமாக இருக்க கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி’ என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் இயக்குனர் ஷங்கருக்கு கமல்ஹாசன் வாட்ச் பரிசளித்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் @shankarshanmugh
— Kamal Haasan (@ikamalhaasan) June 28, 2023
இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி.… pic.twitter.com/Mo6vDq7s8B
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments