பாரதியின் புரட்சி விதை இனியேனும் விதி செய்யுமா? கமல்ஹாசன்
- IndiaGlitz, [Tuesday,September 12 2017]
மகாகவி பாரதியாரின் 96வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் பாரதியாரின் தீவிர ரசிகரான உலக நாயகன் கமல், பாரதியை குறிப்பிட்டு தனது டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
'பாரதி போய் 96 ஆண்டுகளாயிற்று.கவிதையையே பொதுவுடமையாக்கி கல்லாத் தமிழர்க்கும் செவிவழி விதை தூவிய அந்த விவசாயி வம்சம், இனியேனும் விதி செய்யுமா?' என்பதுதான் அவரது டுவீட்
பாரதியார் மரணம் அடைந்து 96 ஆண்டுகள் ஆயிற்று. அவர் எழுதிய கவிதைகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டு கல்வி கற்காதவர்களுக்கும் அவரது பாடல்கள் செவி வழியில் கிடைக்கும் வகையில் செய்து புரட்சி விதையும் தூவப்பட்டுவிட்டது. இனி புதியதொரு விதி செய்வதே பாக்கி' என்று கமல் கூறியுள்ளார்.
கமல் கூறும் சமீபத்திய கருத்துக்களில் இருந்து அவர் நேரடி அரசியலில் ஈடுபட அதிக நாட்கள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பெரும்பாலோர் தங்களுடைய வாழும் பாரதியும், கவிதையும் கமல்தான் தான் என்றும் அதனால் அவர் ஒரு புதிய விதியை உருவாக்கினால் அதை பின்பற்ற தயாராக இருப்பதாகவும் பதிலளித்துள்ளனர்.